உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே மழையால் சாலையில் புளியரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பண்ருட்டி-அரசூர் சாலையில் நேற்று மிதமான மழை பெய்தது.இதில் பண்டரக்கோட்டையில் சாலையை ஒட்டி இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் சாலையையொட்டி இருந்த மின்சார கம்பங்கள் சாய்ந்தது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இது குறித்து தகவலறிந்த புதுப்பேட்டை போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.அதனடிப்படையில் மின்சாரம் நிறுத்தப்பட்டு,சாலையில் விழுந்த புளியமரம் வெட்டி அகற்றப்பட்டு,மின்சார கம்பிகள் சரி செய்யப்பட்டது.இதனால் இந்த சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ