உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அடுத்த எஸ்.புதுாரில் விவசாயிகளுக்கு நீர் அழுத்த மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.மங்களூர் வட்டார ஆத்மா குழு தலைவர் செங்குட்டுவன் வழிகாட்டுதல்படி நடந்த பயிற்சிக்கு, மங்களூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) கீர்த்தனா தலைமை தாங்கினார். விதைச்சான்று அலுவலர் மகேஷ், உதவி அலுவலர் கோவிந்தசாமி, தோட்டக்கலை உதவி அலுவலர் சங்கர், ஆத்மா திட்ட அலுவலர் செல்லமுத்து, முத்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.அதில், சாகுபடி பயிர் வகைகள், எண்ணெய் வித்து மற்றும் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள், வேளாண் மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி தரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ