உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புத்தக கண்காட்சியில் ரகளை; நெய்வேலியில் மூவர் கைது

புத்தக கண்காட்சியில் ரகளை; நெய்வேலியில் மூவர் கைது

நெய்வேலி : நெய்வேலி புத்தக கண்காட்சியில் ரகளையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.நெய்வேலியில், என்.எல்.சி., நிறுவனம் சார்பில், கடந்த 5 ம் தேதி புத்தக கண்காட்சி துவங்கியது. வரும் 14 ம் தேதி வரையில் நடக்கிறது. புத்தக கண்காட்சி வளாகத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக ராட்டினம், ஓட்டல்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பெருமளவில் கூடுகின்றனர்.நேற்று அங்கு வந்த நெய்வேலி வட்டம் 28 ஐ சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் அர்னால்டு, 24, வட்டம் 29 டைப் 1 குடியிருப்பை சேர்ந்த சுப்பிரமணி மகன் விஷ்ணு, 20. மற்றும் வட்டம் 28 ஐ சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டனர்.ராட்டினத்தில் விளையாடிய பள்ளி மாணவர் ஒருவரை தாக்கினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி