பரங்கிப்பேட்டை : கடலுார் மாவட்டத்தில் 12 பி.டி.ஓ.,க்களை இடமாற்றம் செய்து, கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.குறிஞ்சிப்பாடி துணை பி.டி.ஓ., மோகனம்மாள், பதவி உயர்வு பெற்று, விருத்தாசலம் பி.டி.ஓ., வாகவும் (கி.ஊ),கடலுார் துணை பி.டி.ஓ., வெங்கடேசன் பதவி உயர்வு பெற்று, குறிஞ்சிப்பாடி பி.டி.ஓ., வாகவும், குமராட்சி துணை பி.டி.ஓ., பழனிசாமிநாதன் பதவி உயர்வு பெற்று, மேல்புவனகிரி பி.டி.ஓ., வாகவும்(கி.ஊ). குறிஞ்சிப்பாடி மண்டல துணை பி.டி.ஓ., ரவிச்சந்திரன் பதவி உயர்வு பெற்று, அண்ணாகிராமம்பி.டி.ஓ., வாகவும் (கி.ஊ), மேல்புவனகிரி துணை பி.டி.ஒ.,வாக இருந்த ஆனந்தன், பதவி உயர்வு பெற்று, கீரப்பாளையம் பி.டி.ஓ., வாகவும் (கி.ஊ), நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேபோன்று, கடலுார் டான்பிட் அலுவலக பி.டி.ஓ., ரேவதி, பரங்கிப்பேட்டை பி.டி.ஓ., வாகவும், கடலுார் கலெக்டர் அலுவலக மேலாளர் சுப்ரமணியன், கடலுார் ஊராட்சிகள் உதவி இயக்குநர் (தணிக்கை) கண்காணிப்பாளராகவும். அண்ணாகிராமம் பி.டி.ஓ., மீரா கோமதி (கி.ஊ), கடலுார் அலுவலக மேலாளராகவும், ஊராட்சிகள் உதவி இயக்குநர்அலுவலக கண்காணிப்பாளர் வீரமணி, கடலுார் பி.டி.ஓ., வாகவும், குறிஞ்சிப்பாடி பி.டி.ஓ., சுதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளராகவும். மேல்புவனகிரி பி.டி.ஓ., முருகன் (கி.ஊ), அண்ணாகிராமம் பி.டி.ஓ., வாகவும், கடலுார் பி.டி.ஓ., இப்ராஹிம், விருத்தாசலம் பி.டி.ஓ., வாகவும் (கி.ஊ) நியமித்து, கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.