உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உலக வன நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா 

உலக வன நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா 

விருத்தாசலம் : உலக வனநாளை முன்னிட்டு, விருத்தாசலம் வனத்துறை சார்பில், விருத்தாசலம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர் அறிவு களஞ்சியம் மரக்கன்றுகள் நட்டார். வனவர்கள் சிவக்குமார், பன்னீர்செல்வம், வனக்காப்பாளர் நவநீதகிருஷ்ணன், ராம்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.வனச்சரக அலுவலர் ரகுவரன் கூறுகையில், வீட்டிற்கு ஒரு மரக்கன்று நட வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உலக வன நாளில் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்றார்.விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் மாநில நெடுஞ்சாலை, பேரளையூர், நேமம் மற்றும் வேப்பூர் அரசு பள்ளி உள்ளிட்ட இடங்ளில் 750 மரக்கன்றுகள் நடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை