உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரோலர் திருடிய இருவர் கைது

ரோலர் திருடிய இருவர் கைது

மந்தாரக்குப்பம்: நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் இரும்பு ரோலர் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் நேற்று காலை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது இரும்பு ரோலர் திருடிய இருவரை மடக்கி பிடித்து மந்தாரக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்த இளவரசன், 38, மருவாய் பகுதியை சேர்ந்த அஜித்லிவிங்ஸ்டன், 27; என்பது தெரிய வந்தது. இது குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து இளவரசன்,அஜித்லிவிங்ஸ்டன் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ