உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வேப்பூர் அருகே பரபரப்பு

அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வேப்பூர் அருகே பரபரப்பு

வேப்பூர்: வேப்பூர் அருகே அனுமதியின்றி அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.வேப்பூர் அடுத்த என்.நாரையூர் ஊராட்சிக்குள் நுழையும் இடத்தில் அனுமதியின்றி அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டிருப்பதாக வேப்பூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.அங்கு, 5 அடி உயரத்தில் கான்கிரீட்டால் அம்பேத்கர் சிலையை நேற்று முன்தினம் இரவு அனுமதியின்றி திறக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மேலும், சிலையை நிறுவிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !