உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிப்காட் தொழிற்சாலைகளில் வேலை கேட்டு கிராம மக்கள் மனு

சிப்காட் தொழிற்சாலைகளில் வேலை கேட்டு கிராம மக்கள் மனு

கடலுார்: சிப்காட் நிறுவனத்திற்கு எதிராக, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.கடலுார் அடுத்த சின்னகாரைக்காடு கிராம மக்கள் கொடுத்துள்ள மனு;எங்கள் கிராமத்தை சுற்றி சிப்காட் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சிப்காட் நிறுவனம் ஆரம்பிக்கும்போது, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என உறுதி கூறினர். ஆனால், வேளாண் துறை அமைச்சர் அறிவுறுத்தியும் இதுவரை வேலை வாய்ப்பு வழங்கவில்லை. எங்கள் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக கேன்சரால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிப்காட் வளாகத்திற்குள் கேன்சர் சோதனை மையம் அமைக்க வேண்டும். எங்கள் கிராம நிலத்தடி நீரில் பாதரசம் கலந்துள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். காற்று மாசுவை கருவி பொருத்தி கண்காணிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22ம் தேதி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டமும், வரும் ஆக., 5ம் தேதி சிப்காட் நிறுவனம் முன் ஏழு ஊராட்சிகளின் பொதுமக்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி