உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சவுடு மண் குவாரிகளில் விதிமீறல் நிலத்தடி நீர் மட்டம் சரியும் அபாயம்

சவுடு மண் குவாரிகளில் விதிமீறல் நிலத்தடி நீர் மட்டம் சரியும் அபாயம்

சவுடு மணல் குவாரிகளில், அதிகாரிகளின் ஆசியோடு அரசு நிர்ணயம் செய்துள்ள அளவைவிட 25 அடிக்குமேல் ஆழமாக மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை உட்பட 7 இடங்களில், சவுடு மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு, அள்ளப்படும் மணல் லாரிகள் மூலம் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு ஏற்றிச்செல்லப்படுகிறது. அரசு நிர்ணயம் செய்துள்ள அளவைவிட, 25 அடிக்கு மேல் ஆழமாக சவுடு மணல் அள்ளப்பட்டு வருகிறது. உள்ளூர் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆசியோடு இந்த விதிமீறல் நடந்து வருகிறது.மணல் குவாரிகளில் அதிகம் லாபம் கிடைப்பதால், முக்கிய நபர்கள் நிலங்களை வாங்கி இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளது. இதை கண்டித்து, போராட்டத்திற்கு தயாராகி வருவதாக விவாசாயிகள் கூறுகின்றனர்.விதிமீறல் மணல் குவாரிகள் குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் பறந்ததால், சம்மந்தப்பட்ட குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ