விருத்தாசலம் : விருத்தாசலம் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் சகோதரர் ஊரக வளர்ச்சித் துறை முதன்மை பொறியாளரான அரிகிருஷ்ணன் - அமுதவல்லி தம்பதியர் மகன் டாக்டர் அருண்குமார் என்பவருக்கும், கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ்குமார் - கவிதா தம்பதியர் மகள் டாக்டர் திவ்ய சினேகாவுக்கும் முத்தாண்டிக்குப்பம் எம்.ஆர்.ஆர்., திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது.விழாவிற்கு வந்தவர்களை தேவராஜன் - மலர்கொடி; ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., - செந்தில் வடிவு, தம்பதியினர் வரவேற்றனர்.முன்னாள் தமிழக காங்., தலைவர் அழகிரி தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்தார்.அமைச்சர் கணேசன், முன்னாள் அமைச்சர் சம்பத், எம்.எல்.ஏ.,க்கள் சபா ராஜேந்திரன், அருண்மொழித்தேவன், பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் சிவசுப்ரமணியன், திருநாவலுார் ஞானமூர்த்தி, காங்., மாவட்ட தலைவர்கள் திலகர், செந்தில்நாதன், மாநில செயலாளர் சேரன், சித்தார்த்தன், முன்னாள் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் ராஜன், நகர தலைவர் ரஞ்சித்குமார், ஸ்ரீபன், வேல்முருகன், வட்டார தலைவர்கள் சாந்தகுமார், ராவணன், சின்னதுரை, ஆறுமுகம், பீட்டர் சாமிக்கண்ணு, ராமச்சந்திரன், கலியபெருமாள், சுரேஷ், பரமசிவம், சக்திவேல் ராஜன், சக்திவேல் பங்கேற்றனர்.மேலும் மகளிர் காங்., மாவட்ட தலைவர் லாவண்யா, தி.மு.க., விருத்தாசலம் நகர செயலாளர் தண்டபாணி, விருத்தாசலம் நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, பாவாடை கோவிந்தசாமி, சுரேஷ், ஆசைத்தம்பி, மங்கலம்பேட்டை பேரூர் செயலாளர் செல்வம், மாவட்ட கவுன்சிலர் சாமி, எம்.எல்.ஏ., நேர்முக உதவியாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.