உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காட்டுப்பன்றி வேட்டை; 5 பேர் மீது வழக்கு

காட்டுப்பன்றி வேட்டை; 5 பேர் மீது வழக்கு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மின்வேலி அமைத்து காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 5 பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிகுடி கிராமத்தில் மின்வேலி அமைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடி, புதுக்கூரைப்பேட்டை பகுதியில் கட்டுபன்றி இறைச்சி விற்கப்படுவதடுவதாக, விருத்தாசலம் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், வனச்சரக அலுவலர் ரகுவரன், தலைமை வனவர் சிவக்குமார், வனக்காப்பாளர் நவநீதகிருஷ்ணன், அமுதபிரியன், ராம்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று புதுக்கூரைப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, ஆலிச்சிகுடியைச் சேர்ந்த அழகேசன், 65 என்பவரது வயலில் மின்வேலி அமைத்து, காட்டுபன்றிகளை வேட்டையாடியது தெரியவந்தது. அதைடுத்து, அழகேசன், இருப்புகுறிச்சியை சேர்ந்த எடிசன், ஜஸ்டின், முதனை உத்தண்டராயன், வல்லரசு ஆகிய 5 பேர் மீது, விருத்தாசலம் வனத்துறையினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். காட்டுப்பன்றி பறிமுதல் செய்து புதைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ