உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவிலுாரில் புதிய வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டப்படுமா?

கோவிலுாரில் புதிய வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டப்படுமா?

பெண்ணாடம்: கோவிலுாரில் பழுதான வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்ணாடம் அடுத்த கோவிலுார், சிறுமங்கலத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் மூலம் இரு கிராமங்களை சேர்ந்தவர்கள் பிறப்பு, இறப்பு, பட்டா மாற்றம், திருத்தம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற்று பயனடைந்தனர். போதிய பராமரிப்பின்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வி.ஏ.ஓ., அலுவலக சுவர்கள், மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு மழைநீர் கசிந்து ஆவணங்கள் வீணானது. அதைத்தொடர்ந்து, இங்கு பணிபுரிந்த வி.ஏ.ஓ., அதே பகுதியில் நுாலகத்தில் தங்கி பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது.நுாலகத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம் இயங்குவதால் இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொது அறிவு, வரலாறு, போட்டித்தேர்வு வழிகாட்டி உள்ளிட்ட புத்தகங்களை படிக்க முடியாத நிலை உள்ளது.எனவே, பழுதான வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை இடித்து புதிதாக கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை