உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சமுதாய நலக்கூடம் திறக்கப்படுமா?

சமுதாய நலக்கூடம் திறக்கப்படுமா?

விருத்தாசலம் : வி.குமாரமங்கலம் கிராமத்தில் பூட்டிக்கிடக்கும் சமுதாய நல கூடத்தை திறந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் அடுத்த வி.குமாரமங்கலம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராம மக்கள் நலன் கருதி, கடந்த 2008 - 2009 ம் ஆண்டு எம்.பி., நிதி ரூ.10 லட்சம் மதிப்பில் சமுதாய நல கூடம் கட்டி திறக்கப்பட்டது. இதில், திருமணம், காதணி விழா உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளை கிராம மக்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில், ஒருசில மாதங்களில் எவ்வித முன் அறிவிப்புமின்றி சமுதாய நலகூடம் பூட்டப்பட்டது.இதனால், கிராமத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பெரும் தொகை கொடுத்து தனியார் மண்டபத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல், தங்கள் வீடுகளில் தற்காலிக பந்தல் அமைத்து சுப நிகழ்ச்சிகளை நடத்தும் நிலை உள்ளது.எனவே, கிராமத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் நலன் கருதி, பூட்டிக்கிடக்கும் சமுதாய நலகூடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை