உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒர்க் அவுட் ஆகுமா தே.மு.தி.க., செண்டிமென்ட்

ஒர்க் அவுட் ஆகுமா தே.மு.தி.க., செண்டிமென்ட்

நடுவீரப்பட்டு : பண்ருட்டி, நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையம் இடையர்குப்பத்தில் உள்ள ராமர்கோவில், நடுப்பேட்டையில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வழிபாடு செய்து விட்டு, வேட்பாளர்கள் பிரசாரத்தை துவக்குவர். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தி.மு.க., சார்பில் ரமேஷ், அ.தி.மு.க.,, கூட்டணி சார்பில் பா.ம.க., கோவிந்தசாமி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ரமேஷ் வெற்றி பெற்றார்.2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,, சார்பில் தற்போதைய வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., சார்பில் செல்வி ராமஜெயம் போட்டியிட்டனர். இதில் பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். இரு தேர்தல்களில் வெற்றி பெற்ற இருவருமே, இங்கு பிரசாரத்தை துவக்கியவர்கள்,இங்கு பிரசாரத்தை துவக்கியும் நமக்கு ராசியில்லை என, அ.தி.மு.க., கட்சியினர் விரக்தி அடைந்தனர். அதனால், கடலுார் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவகொழுந்து, கடந்த 6ம் தேதி, பிரசார இடத்தை மாற்றி, கடலுார் திருவந்திபுரத்திலிருந்து துவங்கினார். சி.என்.பாளையத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த புதிய செண்டிமென்ட் பிரசாரம் அ.தி.மு.க., விற்கு ஓர்க் அவட் ஆகுமா என்பதை பார்ப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !