மேலும் செய்திகள்
அரசு டவுன் பஸ் மோதி கொத்தனார் பலி
02-Sep-2024
பிளேடால் கிழித்த வாலிபர் கைது
07-Sep-2024
விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த எருமனுார் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன் மனைவி தனலட்சுமி,40. இவருக்கு நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், தனலட்சுமி, தான் சிகிச்சை பெற்று வந்த வார்டில், தனது புடவையால் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, இரவு 11:00 மணியளவில் இறந்தார்.தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் தனலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Sep-2024
07-Sep-2024