உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலெக்டரிடம் மனு கொடுத்த பெண் தீயிட்டு மர்ம மரணம்

கலெக்டரிடம் மனு கொடுத்த பெண் தீயிட்டு மர்ம மரணம்

வேப்பூர்: வேப்பூரில் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு வந்த பெண் தீயிட்டு மர்மமான முறையில் இறந்ததால் பரபரப்பு நிலவியது.வேப்பூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி நீலாவதி, 29, இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது, வேப்பூர் துணை மின்நிலையம் அலுவலகம் முன் வாடகை வீட்டில் வசித்து வருகிறன்றனர்.இந்நிலையில், நேற்று பகல் 11:00 மணியளவில் வேப்பூர் அடுத்த காட்டுமயிலுாரில் நடந்த மனுநீதி நாள் முகாமில் தங்களுக்கு பட்டா வழங்க கோரி நீலாவதி மனு வழங்கி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின், பகல் 3:00 மணியளவில் இருந்து நீலாவதியை காணாததால் அப்பகுதி முழுவதும் அனைவரும் தேடிய நிலையில், சீனிவாசன் வீட்டுமனை பிரிவில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து, கொலையா? தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை