உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இளம்பெண் மர்ம சாவு; போலீசார் விசாரணை

இளம்பெண் மர்ம சாவு; போலீசார் விசாரணை

திட்டக்குடி : திட்டக்குடி அருகே இளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக, தாய் கொடுத்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஆவினங்குடி அடுத்த தொளார்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி இந்துமதி, 27. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வேல்முருகன் தற்போது வெளிநாட்டில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு இந்துமதிக்கும், பக்கத்துவீட்டில் இருந்தவர்களுக்கு வாய்தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் இந்துமதி, அவரது வீட்டில் துாக்குபோட்டு இறந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்த ஆவினங்குடி போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.சாவில் சந்தேகம் உள்ளதாக இந்துமதியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை