உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் கடைகளில் திருடிய வாலிபர் கைது

விருத்தாசலம் கடைகளில் திருடிய வாலிபர் கைது

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மொபைல் போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி அருகே செந்தில் என்பவரது மளிகை கடை பூட்டை உடைத்து, நேற்று முன்தினம் ரூ.1.40 லட்சம் ரொக்கம் மற்றும் ஜங்ஷன் சாலையில் உள்ள அரசன் டிரேடர்ஸ் பர்னிச்சர் கடையில் மொபைல் போன் திருடப்பட்டது.இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், உளுந்துார்பேட்டை, கீரனுார் எரியைச் சேர்ந்த கண்ணன் மகன் அஜித், 28; மற்றும் 17 வயது சிறுவன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, அஜித்தை கைது செய்த விருத்தாசலம் போலீசார், தலைமறைவாக உள்ள 17 வயது சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை