உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் திருடிய வாலிபர் கைது

பைக் திருடிய வாலிபர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சதீஷ், 34. பஞ்சர் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை இவரது கடையில் நிறுத்தியிருந்த, பைக் காணாமல் போனது. சதீஷ் புகாரின் பேரில், விருத்தாசலம் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அருணகிரி மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சுந்தர் ஆகியோர் விசாரித்து வந்தனர்.அதில், விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலையில், கம்மாபுரம் அருகே வாகன சோதனை போலீசார் ஈடுபட்டபோது , அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர், நெய்வேலி வடக்குத்து, வடக்கு வெள்ளூரை சேர்ந்த முருகேசன் மகன் முருகவேல், 27, என்பதும் பைக்கை திருடியதையும் ஒப்புக் கொண்டார். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, முருகவேலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ