| ADDED : ஜன 07, 2024 05:35 AM
கடலுார்: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இதுகுறித்து சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறியாவது:சிறு சிறு குற்றங்களுக்காக டாஸ்மாக் குடோன்களுக்கு மாற்றப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் கடைகளில் பணி வழங்க வேண்டும். இட மாறுதலில் சரியான நடைமுறை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தது. டாஸ்மாக் நிர்வாக மேலாண்மை இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை கடந்த டிச., 31ம் தேதிக்குள் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.இதனை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் வரும் 10ம் தேதி மாநிலம் முழுதும் 5 மண்டலங்களில், முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட தலைவர் அல்லிமுத்து, மாவட்ட செயலாளர் பாலமுருகன் உடனிருந்தனர்.