உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் கஞ்சா பதுக்கிய 12 பேர் கைது

சிதம்பரத்தில் கஞ்சா பதுக்கிய 12 பேர் கைது

சிதம்பரம்,: சிதம்பரத்தில் ஒன்னேகால் கிலோ கஞ்சாவுடன் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் பட்டறை சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் அங்கு சென்று, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் போடுவது தெரிந்தது. அவர்களை கைது செய்து, ஒன்னேகால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சிதம்பரம் ஓமக்குளம் நவீன்ராஜ், 26; சிவசக்தி நகர் விக்னேஷ்குமார், 22; அண்ணாகுளம் சூர்யபிரகாஷ், 20; கனகசபை நகர் ரத்னசபாபதி, 19; எம்.கே.தோட்டம் கவிபாரதி, 21; எடத்தெரு ஹரிபிரசாத், 20; சாலியந்தோப்பு சத்தியமூர்த்தி,18; விபீஷ்ணபுரம் சத்தியநாராயணன், 23; அம்மாபேட்டை மணிக்கதிர்,18; திருவேட்களம் குணசெல்வம்,18; கோவிலாம்பூண்டி தேவராஜ், 18; ஜம்புகுளம் லாரன்ஸ், 21; என, தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை