| ADDED : டிச 04, 2025 05:24 AM
விருத்தாசலம்: தொடர் மழையின் காரணமாக, விருத்தாசலம் தாலுகாவில் நேற்று ஒரேநாளில் 14 வீடுகள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில், கடந்த ஒருவாரமாக பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, விருத்தாசலம் நகரத்தை சேர்ந்த கொளஞ்சி; சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்த பூங்கோதை; ரவி; குமார்; மு.அகரம் கிராமத்தை சேர்ந்த சாந்தி; கோ.மாவிடந்தல் செல்வி; கோ.ஆதனுார் செண்பகவள்ளி; பெருந்துறை முருகன் ஆகியோரது கூரை வீடுகளும், சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு; கார்குடல் உண்ணாமலை; கோ.மாவிடந்தல் அஞ்சலை; ெஹலன்; கோட்டுமுளை மணிகண்டன்; சுதா ஆகியோரது ஓட்டு வீடுகளும் சேதமடைந்தன. இதுகுறித்து, விருத்தாசலம் வருவாய்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.