உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கத்தியுடன் அச்சுறுத்திய 2 வாலிபர்கள் கைது

கத்தியுடன் அச்சுறுத்திய 2 வாலிபர்கள் கைது

காட்டுமன்னார்கோவில்::காட்டுமன்னார்கோவில் அருகே கத்தியுடன் சுற்றித் திரிந்து பொதுமக்களை அச்சுறுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த டி.நெடுஞ்சேரி கடை வீதியில், நேற்று பட்டப்பகலில் 2 வாலிபர்கள் போதையில் பைக்கில் பட்டா கத்தியை கையில் வைத்துக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தினர்.பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.தகவலறிந்த புத்துார் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, 2 வாலிபர்களையும் விரட்டிச் சென்று பிடித்தனர். விசாரணையில், டி. நெடுஞ்சேரி அடுத்த சேதியூர் ஜனகராஜ் மகன் சந்தோஷ்,18; மணிமாறன் மகன் சுகுமாறன்,19; எனத் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, 2 பட்டா கத்திகள், பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !