உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் அரிசி கடத்தல் 2,500 கிலோ பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தல் 2,500 கிலோ பறிமுதல்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே கடத்த முயன்ற, 2,500 கிலோ ரேஷன் அரிசியை நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எல்.என்., புரம் ஊராட்சி, பி.டி.எஸ்., மணி நகரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், விழுப்புரம் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் தலைமையில் போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, முத்தவள்ளி என்பவரின் வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், 45; என்பவர் 54 மூட்டைகளில் 2,500 கிலோ ரேஷன் அரிசியை புதுச்சேரிக்கு கடத்த முயன்றது தெரிந்தது. உடன், போலீசார், அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, கடலுார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷிடம் ஒப்படைத்து புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து சக்திவேலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை