தொடர் கனமழையால் 3000 ஏக்கர் நெற் பயிர்கள் சேதம்
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் சுற்றுப்பகுதிகளான பூவாலை, வயலாமூர், அலமேல் மங்காபுரம், வேளங்கிப்பட்டு, சேந்திரக்கிள்ளை, பெரியக்குமட்டி, சின்னக்குமட்டி, மணிக்கொல்லை, அத்தியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், சுமார் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, நெல் பயிர்கள் முளைத்தது. மேலும் களையை கட்டுப்படுத்தும் வகையில், விவசாயிகள் களைக்கொல்லி மருந்து தெளித்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த, தொடர்மழை காரணமாக இப்பகுதியில், நெல் விதைப்பு செய்த நிலங்களில் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் நெற்பயிர்கள் அழுகி, விவசாயத்திற்கு செலவு செய்த பணம், வீணாகி விடுமோ என, இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.