உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நினைவு நாள் அனுசரிப்பு

நினைவு நாள் அனுசரிப்பு

மந்தாரக்குப்பம்: ஊமங்கலத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் அறிவுறுத்தலில், அ.தி.மு.க., ஊமங்கலம் மேற்கு பகுதி கிளை சார்பில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் சிவசுப்ரமணியம், கனகசிகாமணி, கந்தசாமி, ராமலிங்கம், செல்வராஜ், பெரியசாமி, பன்னீர்செல்வம், ரமேஷ்,காளிதாஸ், ஊமதுரை, மணிகண்டன், சந்தோஷ்குமார், தனசேகரன், கந்தன் மற்றும் கிளை நிர்வாகிகள் கிராம பொதுமக்கள்,உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ