மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத முதியவர் சடலம்
01-Aug-2025
கோவிலில் திருட்டு 2 பேரிடம் விசாரணை
24-Aug-2025
புவனகிரி : புவனகிரி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு, பவானி அடுத்த பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு மனைவி உமாதேவி, 41; இவரது மகள்கள் உத்திரா, 18; மற்றும் 13 வயது மகள், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் பரணிதரன், 25; யோகா மாஸ்டர். சிதம்பரத்தில் நடக்கும் யோகா போட்டியில் உத்திரா பங்கேற்பதற்காக 4 பேரும் நேற்று மாருதி காரில் சிதம்பரம் வந்து கொண்டிருந்தனர். காரை பரணிதரன் ஓட்டினார். அதிகாலை 5:30 மணிக்கு புவனகிரி அடுத்த உடையூர் வளைவில் வந்த போது நிலை தடுமாறி கார் அகில் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் காரில் வந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பினர். புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
01-Aug-2025
24-Aug-2025