உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிச்சயதார்த்தத்தில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

நிச்சயதார்த்தத்தில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பண்ருட்டி : பண்ருட்டி அருகே நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த முங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பூராசாமி. இவரது மகள் திரிஷா,21; சிறுவயது முதல் திரிஷாவை மகள் வழி பாட்டி காந்திமதி வளர்த்து வந்தார். திரிஷாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, நிச்சயதார்த்த விழா முத்தாண்டிக்குப்பம் தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.அதிக செலவு செய்து திருமண ஏற்பாடு செய்வதால் ஆத்திரமடைந்த காந்திமதியின் மகன் தட்சிணாமூர்த்தி, மனைவி இந்திராணி,மகன்கள் செல்வராசு, வல்லரசு ஆகிய 4 பேரும் காந்திமதி மற்றும் திரிஷாவிடம் தகராறு செய்து ஆபாசமாக திட்டி தாக்கினர். இதை தடுக்க வந்த தட்சணாமூர்த்தியின் தம்பி பாலமுருகன் மனைவி புஷ்பாவதியையும் தாக்கினர். திரிஷா புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் தட்சணாமூர்த்தி, இந்திராணி, செல்வராசு, வல்லரசு ஆகிய நான்குபேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை