உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக காதலித்து ஏமாற்றிய வாலிபர் மற்றும் அவரது தாய் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த, 22; வயது இளம் பெண்ணை, அதேபகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் மணிமாறன் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். இந்நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, மணிமாறன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி இளம்பெண்ணை மீண்டும் கட்டாயப்படுத்தி தனிமையில் இருந்தபோது அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.இதனை மணிமாறன் மறுத்துள்ளார்.பின் பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் மணிமாறனிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மணிமாறன் மற்றும் அவரது தாய் இந்திராகாந்தி ஆகியோர் சேர்ந்து இளம்பெண்ணை அசிங்கமாக திட்டினர்.புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணிமாறன், தாய் இந்திராகாந்தி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை