உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கூரை வீடு எரிந்து மாற்றுத்திறனாளி பலி : விருத்தாசலம் அருகே பரிதாபம்

 கூரை வீடு எரிந்து மாற்றுத்திறனாளி பலி : விருத்தாசலம் அருகே பரிதாபம்

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்த விபத்தில், மாற்றுத்திறனாளி உயிரிழந்தார். மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துார் காலனியை சேர்ந்தவர் முருகேசன் மகன் அழகேசன், 50; இரு கால்களும் செயலிழந்தவர். இவர், அங்குள்ள இருசாயி அம்மன் கோவில் அருகே கூரை வீடு கட்டி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஜோசியம் கூறி வாழ்ந்து வந்தார். திருமணமாகாத அழகேசன், தனியே வசித்து வந்த நிலையில், நேற்று காலை 8:30 மணியளவில், வீட்டில் சமையல் செய்தபோது, திடீரென அவரது வீட்டின் கூரையில் தீப்பிடித்து எரிந்து வீடு முழுவதும் பரவியது. மாற்றுத்திறனாளியான அழகேசன் வெளியே வர முடியாமல் தவித்துள்ளார். காட்டுப்பகுதியில் கோவில் இருப்பதால், தீ விபத்து குறித்து பொது மக்களுக்கு தெரியவில்லை. அதன்பின், வயலுக்கு சென்றவர் பார்த்து தகவல் தெரிவித்ததன் பேரில் , மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை