உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காலாவதியான மருத்து கொடுத்த தனியார் மருத்துவமனை முற்றுகை; விருத்தாசலத்தில் பரபரப்பு 

காலாவதியான மருத்து கொடுத்த தனியார் மருத்துவமனை முற்றுகை; விருத்தாசலத்தில் பரபரப்பு 

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் குழந்தைக்கு காலாவதியான சொட்டு மருந்தை கொடுத்த தனியார் மருத்துவமனையை பெற்றோர், உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம், செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி சுப்பு. இவர்களது 10 மாத குழந்தை சோர்வாக இருந்ததால், நேற்று தென்கோட்டை வீதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர்.அப்போது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு சொட்டு மருந்து கொடுத்தார். அப்போது, குழந்தை தொடர்ச்சியாக வாந்தியெடுத்தது. சந்தேகமடைந்த பெற்றோர், சொட்டு மருந்தினை சோதனை செய்தனர். அதில், காலாவதியான சொட்டு மருந்தை குழந்தைக்கு கொடுத்தது தெரிய வந்தது.ஆத்திரமடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை நேற்று முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களிடம் பேசி, சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ