உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒர்க் ஷாப்பில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

ஒர்க் ஷாப்பில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

நெல்லிக்குப்பம். : நெல்லிக்குப்பத்தில் கார் ஒர்க் ஷாப்பில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லிக்குப்பம் காமராஜர் நகர் அருகே கார் மெக்கானிக் கடை நடத்தி வருபவர் நடராஜன். இவர் நேற்று கடையில் கார் ரிப்பேர் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பழைய பொருட்கள் வைத்திருந்த இடத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த நடராஜன் அலறி அடித்து வெளியே ஓடி வந்தார். தகவலறிந்த வரக்கால்பட்டை சேர்ந்த பாம்புபிடி வீரர் கிருபாகரன் வந்து 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்து எடுத்து சென்றார். கடுமையான வெய்யில் இருப்பதால் நிழலை தேடி பாம்புகள் வருவதாக கிருபாகரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ