உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விபத்தில் பெண் பலி

விபத்தில் பெண் பலி

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அருகே சாலையை கடந்து சென்ற பெண் மீது சரக்கு வேன் மோதி இறந்தார்.குள்ளஞ்சாவடி அடுத்த சின்னதோப்புக்கொல்லை, கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் தனசிங்கு மனைவி, காமாட்சி, 50; இவர், நேற்று முன்தினம் அதே பகுதி பஸ் நிறுத்தம் அருகே கடலுார் - விருத்தாச்சலம் சாலையை கடந்து சென்றார்.அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி சரக்கு வேன் மோதியதில் காமாட்சி படுகாயமடைந்தார். உடன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காமாட்சி இறந்தார். குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ