உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராமநத்தம் காவலர்களுக்கு விபத்து காப்பீடு அட்டை வழங்கல்

ராமநத்தம் காவலர்களுக்கு விபத்து காப்பீடு அட்டை வழங்கல்

ராமநத்தம்; ராமநத்தம் காவலர்களுக்கு விபத்து காப்பீடு அட்டை மற்றும் டார்ச் சலைட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சென்னை - திருச்சி, கடலுார் - திருச்சி, விருத்தாசலம் - ஆத்துார் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் ராமநத்தம் அமைந்துள்ளது. மாவட்டத்தின் கடைகோடியிலும், தேசிய நெடுஞ்சாலையிலும் அமைந்துள்ளதால், அதிக விபத்துகள் மற்றும் குற்றச் செயல்கள் நடக்கின்றன. இதனால், காவலர்களின் பாதுகாப்பு கருதி, இந்திய தபால் துறையில் 5 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு அட்டை மற்றும் இரவு ரோந்து பணிக்காக டார்ச் லைட் ஆகியவற்றை ராமநத்தம் இன்ஸ்பெக்டர் பிருந்தா வழங்கினார். சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி