உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வேளாண் மாணவர்கள் கிராம மதிப்பீடு பயிற்சி

 வேளாண் மாணவர்கள் கிராம மதிப்பீடு பயிற்சி

நடுவீரப்பட்டு: பல்லவராயநத்தம் கிராமத்தில் வேளாண் கல்லுாரி மாணவர்கள், விவசாயிகளுக்கு கிராம மதிப்பீடு குறித்து பயிற்சி அளித்தனர். பண்ருட்டி அடுத்த பாலுார், பல்லவராயநத்தம் கிராமத்தில் திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் வேளாண்மை பயிற்சி பெற்று வருகின்றனர். அதன்படி, பாலுார் காய்கறி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள் விஜய்செல்வராஜ், அறிவுக்கரசு, கமலக்கண்ணன் தலைமையில், வேளாண் மாணவர்கள் பல்லவராயநத்தம் அரசு துவக்க பள்ளியில் கிராமப்புற மதிப்பீடு திட்டத்தின் மூலமாக பொதுமக்கள் கிராம வளங்களை கண்டறிந்தனர். மேலும், வரைபடத்தின் மூலம் தினசரி செயல்பாடுகள், வேளாண்மையில் ஏற்படும் சிக்கல்கள், வளங்கள் பற்றி விவசாயிகளுக்கு மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை