உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் 

அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் 

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த சாக்காங்குடியில் அ.தி.மு.க., கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் கருப்பன் தலைமை தாங்கினார். அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் முருகுமணி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாநில துணை செயலாளர் அருளழகன், பூத்கமிட்டி மேற்பார்வையாளர் பிரபாகரன், ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சீனிவாசன் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயப்பிரியா, முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் பூத்கமிட்டி நிர்வாகிகளின் பட்டியல்களை ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கி பேசினார். எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணை செயலாளர் அரங்கப்பன், ஒன்றிய துணை செயலாளர் செந்தமிழ்செல்வன், சார்பு அணி நிர்வாகிகள் மாயவேல், கார்த்தி, ரவிச்சந்திரன், சதீஷ், முன்னாள் சேர்மன் வள்ளிதில்லைமணி, முன்னாள் கவுன்சிலர்கள் கமலக்கண்ணன், செல்வி, முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை