அ.தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி பிரசாரம்; அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., அழைப்பு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பிற்கு வருகை தரும் அ.தி.மு.க.. பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;தி.மு.க., அரசு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனிபெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்க கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, கடந்த 7ம் தேதி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் பிரசாரத்தை துவக்கி உள்ளார்.அதன் தொடர்ச்சியாக, கடலுார் மேற்கு மாவட்டம், புவனகிரி தொகுதிக்குட்பட்ட சேத்தியாத்தோப்பில் நாளை (16ம் தேதி), மாலை 5.45 மணிக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசுகிறார். இந்த கூட்டத்தில், மாநில, மாவட்ட, நகர, பேரூராட்சி, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.