மேலும் செய்திகள்
தெற்கு நகர அ.தி.மு.க., பூத் கூட்டம்
15-Apr-2025
கடலுார்: நெய்வேலியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாளையொட்டி கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு, அண்ணா தொழிற்சங்கம், என்.எல்.சி., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், மாவட்ட மருத்துவரணி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அண்ணா தொழிற்சங்க இணைசெயலாளர் சூரியமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திருமலைவாசன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், ஊழியர் சங்க செயலாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தனர். 100க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஜெ., பேரவை துணை செயலாளர்கள் சிவசுப்பிரமணியன், பக்தரட்சகன், தெற்கு மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ராஜசேகர், என்.எல்.சி., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க தலைவர் பாரதிதாசன், பொருளாளர் அமுல்ராஜ், அலுவலக செயலாளர் ஜாகிர் உசேன், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கமலக்கண்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஷ்யம், வினோத், வடலுார் நகர செயலாளர் பாபு, பேரூர் செயலாளர் ஆனந்தபாஸ்கரன், மாவட்ட அவைத் தலைவர் முத்துலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தராஜ், ஞானசெல்வி கல்யாணசுந்தரம், பொருளாளர் தேவநாதன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கப்பன், இணை செயலாளர் பெருமாள், இளைஞரணி செயலாளர் அன்பு, விவசாய அணி செயலாளர் லோகநாதன், மாணவரணி செயலாளர் சஞ்சீவி, மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தங்கரத்தினம், வர்த்தக பிரிவு செயலாளர் ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
15-Apr-2025