அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதியில் கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது. ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன், மாநில ஜெ., பேரவை இணை செயலாளர் பாலமுருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் நவநீத கிருஷ்ணன், சவுந்தரராஜன், முன்னாள் சேர்மன் லதா ஜெகஜீவன்ராம் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி பிரகாஷ் வரவேற்றார். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் வடமலை, துணை செயலாளர்கள் சக்திவேல், திருச்செல்வம், இளைஞரணி துணை செயலாளர் ஜெயபால், ஒன்றிய பொருளாளர் வாகீசம்பிள்ளை, ஒன்றிய துணை செயலாளர் பன்னீர்செல்வம், சந்தானம், வசந்தராஜன், ஜெகதீசன், மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.