மேலும் செய்திகள்
அங்கன்வாடிக்கு புதிதாக கட்டடம் கட்ட கோரிக்கை
20-Jun-2025
நெல்லிக்குப்பம : திருக்கண்டேஸ்வரம் பள்ளி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள அங்கன்வாடி கட்டடம் பழுதானதை சரி செய்யாததால் வாடகை கட்டடத்தில் இயங்கும் அவலம் உள்ளது. நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியை ஒட்டி அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு, அப்பகுதியை சேர்ந்த 25 குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான உணவு அங்கேயே தயார் செய்து வந்தனர்.இந்நிலையில், அங்கன்வாடி மைய கட்டடம் மிகவும் பழமையான ஓட்டு கட்டடமாக உள்ளது. இதனை சுற்றி புதர்கள் மண்டியும் அருகில் உள்ள மரத்தின் கிளைகள் கட்டடத்தின் ஓடுகள் மேல் சாய்ந்தும் உள்ளன. கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடித்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டுமென, நகராட்சி நிர்வாகத்திடம் கவுன்சிலர் செல்வகுமார் புகார் அளித்தார். இது எங்கள் கட்டுபாட்டில் இல்லை என அதிகாரிகள் கூறி விட்டனர். இதனால், அங்கன்வாடி மையம் சீரமைக்காத நிலையில், வாடகை கட்டடத்தில் இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளளது. இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20-Jun-2025