அண்ணாதுரை பிறந்த நாள் விழா மாணவர்களுக்கு பேச்சு போட்டி
கடலுார் : முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு வரும் 2ம் தேதி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடக்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் கூறியுள்ளார். அவரது செய்திக் குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு கடலுார் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வரும் 2ம் தேதி பேச்சுப் போட்டி நடக்கிறது. இப்போட்டி கடலுார், மஞ்சக்குப்பம் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் நடக்கிறது. வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு 5,000 ரூபாய், 2ம் பரிசு 3000, 3ம் பரிசு 2000 ரூபாய் வழங்கப்படும். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அவர்தம் பள்ளி மாணவர்களிடையே முதற்கட்டமாக தமிழ் மன்றம் வாயிலாக முதல் சுற்று பேச்சுப்போட்டிகள் கீழ்நிலையில் நடத்தி மாணவர்களை தேர்வு செய்து, முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக போட்டியில் பங்கேற்க செய்ய வேண்டும். கல்லுாரி அளவிலான போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியல் சம்பந்தப்பட்ட கல்லுாரிகளின் முதல்வர்கள் வழியாகவும், gmail.comஎன்ற மின்னஞ்சல் வழியாகவும், வரும் 1ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.