உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புகையிலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

புகையிலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சிதம்பரம்: புவனகிரி அருகே அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.அண்ணாமலை பல்கலைக்கழக இறுதியாண்டு வேளாண் மாணவர்கள், பேராசிரியர் பாலகிருஷ்ணன் ஏற்பாட்டில், சிதம்பரம் அருகே சுத்துக்குழி கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், புவனகிரி அடுத்த பூதவராயண்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், வேளாண் மாணவர்கள் சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியர் விசாலாட்சி துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் செல்வி, கமல், ஆரோக்யதாஸ், சத்யகலா முன்னிலை வகித்தனர். மாணவர்கள் குழு தலைவர் விஸ்வாஸ் புகையிலை தடுப்பு குறித்து பேசினார். மாணவர்கள் விஷ்ணுவர்தனன், விஜயன், விஜயரங்கன், விமல், விமல் ராஜ், வினோத், விஷ்ணுபிரியன், வி.ஆர்.விஷ்ணுபிரியன், யோகேஷ், யுகேஷ், யுகேஷ்குமார், யுவராஜ், விவேக், மகேஷ் நடராஜன் ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ