உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குமராட்சி ஊராட்சி தலைவருக்கு பாராட்டு

குமராட்சி ஊராட்சி தலைவருக்கு பாராட்டு

சிதம்பரம்; குமராட்சியில், ஊராட்சி தலைவர் பதவி நிறைவு பெறுவதையொட்டி, ஊராட்சி பணியாளர்களுக்கு உதவிகள் மற்றும் ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா நடந்தது.குமராட்சி ஊராட்சி தலைவர் தமிழ்வாணன் பதவி கடந்த 6 ம் தேதியுடன் முடிவடைந்தது. அதனையொட்டி வார்டு உறுப்பினர்கள், துாய்மை பணியாளர்கள், செயலர், டேங்க் ஆபரேட்டர், எலக்ரீஷியன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட ஊராட்சி பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி ஊராட்சி தலைவர் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, வர்த்தக சங்கம் மற்றும் கிராம மக்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், குமராட்சியில், அரசு கலைக் கல்லூரி, தீயணைப்பு நிலையம், 108 ஆம்புலன்ஸ், வேளாண் விரிவாக்க மையம், சமுதாய நலக்கூடம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த ஊராட்சி தலைவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை