உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆருத்ரா தரிசன விழா ஆலோசனை கூட்டம்

ஆருத்ரா தரிசன விழா ஆலோசனை கூட்டம்

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் 4 ம் தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதனை தொடர்ந்து, 12ம் தேதி தேரோட்டம், 13ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. இந்நிலையில் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, அனைத்து துறை அதி காரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மி ராணி தலைமையில், அவரது அலுவ லகத்தில் நடந்த கூட்டத்தில் டி.எஸ்,.பி., லாமேக், நகராட்சி கமிஷனர் மல்லிகா, நகரமன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், பொறியாளர் சுரேஷ், கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் பட்டு தீட்சிதர், சபாபதி தீட்சிதர், அஸ்வின் தீட்சிதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பல்வேறு அரசு துறை சார்பில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கிய வீதிகளில் பாதுகாப்பு பணிகள், தடையில்லா மின்சாரம், நடமாடும் 108 ஆம்புலன்ஸ், பக்தர்களுக்கு கழிவறை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது, சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.உணவு பாதுகாப்பு அதிகாரி பத்மநாபன், தாசில்தார் ஹேமா ஆனந்தி, வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை