உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உர விற்பனை நிலையங்களில் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு

உர விற்பனை நிலையங்களில் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு

சேத்தியாத்தோப்பு, : உரங்கள், யூரியா இருப்புகள் குறித்து தனியார் உரக்கடைகளை வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.சேத்தியாத்தோப்பு குறுவட்டம், மேல்புவனகிரி பகுதிகளில் 10 ஆயிரம் எக்டர் சம்பா பருவ நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் வளர்ச்சி பருவத்தை எட்டி வரும் நிலையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், யூரியாக்கள், இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், உரவிற்பனை நிலையங்கள், தனியார் கடைகள், வேளாண் விரிவாக்க மையங்களில் புவனகிரி வேளாண் உதவி இயக்குனர் முகமது நிஜாம் ஆய்வு செய்தார்.சேத்தியாத்தோப்பு, புவனகிரி தாலுகாவில் நெல் சாகுபடிக்கு தேவையான 25 மெட்ரிக் டன் யூரியா, 60 மெட்ரிக் டன் டி.ஏ.பி., பொட்டாஷ், இடுபொருட்கள் என அனைத்தும் ஆங்காங்கே உள்ள வேளாண் விரிவாக்க மையங்கள், துணை விரிவாக்க மைங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய இருப்புகள் கடந்த ஒருமாதத்திற்கு முன்பே வைக்கப்பட்டுள்ளது.சம்பா பருவத்திற்கு தேவையான உரங்களை அங்கீகரிக்கபட்டுள்ள உர விற்னை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் , வேளாண் விரிவாக்க மையங்களில் உரிய ரசீதுகளுடன் உரங்களை வாங்குமாறு விவசாயிகளிடம் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை