உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாய் மீது தாக்குதல்; பாசக்கார மகன் கைது

தாய் மீது தாக்குதல்; பாசக்கார மகன் கைது

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டையில், தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த, பாசக்கார மகனை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை நல்லாம்பிள்ளை தெருவை சேர்ந்தவர் லலிதா, 60; இவரது மகன் வெற்றிவேல், 37; இவர், கடந்த 15ம் தேதி தாய் லலிதாவிடம், மது குடிக்க பணம் கேட்டுள்ளார். பணம் தராததால், ஆத்திரமடைந்த வெற்றிவேல், லலிதாவை, ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.லலிதா கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து, வெற்றிவேலை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை