மேலும் செய்திகள்
சட்டப்பணிகள் ஆணைக்குழு மரக்கன்றுகள் நடும் விழா
19-Apr-2025
கடலுார்; கடலுார் மாவட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா பூவாணிகுப்பம் விக்னேஸ்வரா பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.கடலுார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி தலைமை தாங்கினார். கடலுார் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஷோபனாதேவி, தலைமை குற்றவியர் நீதித்துறை நடுவர் நாகராஜன், முதன்மை சார்பு நீதிபதி ராஜேஷ்கண்ணன், குறிஞ்சிப்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர், கடலுார் நீதிமன்ற, நீதித்துறை நடுவர்கள், கடலுார் பார் அசோசியேஷன் செயலாளர் செந்தில்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் செயலாளர் கார்த்திகேயன், டி.ஆர்.ஓ.,ராஜசேகரன், மாவட்ட வனஅலுவலர் குருசாமி, ஆர்.டி.ஓ.,அபிநயா முன்னிலை வகித்தனர்.முதன்மை மாவட்ட நீதிபதி பேசுகையில், வருங்கால சந்ததியினர் சுத்தமான காற்றை சுவாசிக்கவும், மழை பெறவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மரம் நடுவது அவசியம். விழாவில் பங்கேற்றுள்ள ஒவ்வொருவரும் இரண்டு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்றார்.தொடர்ந்து பெண்கள் எதிர்கொள்ளும் சட்டப்பிரச்சினைகள், சட்ட உதவியைப்பெறும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின் பெருமாள் ஏரிக்கரையில் முதன்மை மாவட்ட நீதிபதி தலைமையில், பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது.கடலுார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பட்டியல் வழக்கறிஞர் ராம்சிங், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்திட்டங்கள் குறித்து பேசினார். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நாகராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கடலுார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மூத்த உரிமையியல் நீதிபதி அன்வர் சதாத் செய்திருந்தார்.
19-Apr-2025