வேப்பூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வேப்பூர்: வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சார்பில் குற்ற சம்பவங்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த வாரம் 2 ஆசிரியர்களை தாக்கிய பிளஸ் 2 மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இப்பள்ளியின் முன்னாள் மாணவரான அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். தலைமை ஆசிரியர் பரமசிவம், உதவி தலைமை ஆசிரியர் உதயக்குமார், உடற்கல்வி ஆசிரியர் ரவிக்குமார் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.