விஷ்ணு துர்க்கைக்கு வளையல் அலங்காரம்
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் விஷ்ணு துர்க்கை அம்மன் வளையல் மாலை அலங்காரத்தில் அருள்பாலித்தார். நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் விஷ்ணு துர்க்கை அம்ம னுக்கு தனி சன்னதி உள் ளது. இங்கு, ஆடிப்பூரத்தை யொட்டி விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் மாலை அணிவித்து அருள்பாலித்தார். பூஜைகளை ஹரிபிரபு குருக்கள் செய்தார். இதேப் போன்று, நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர், கைலாசநாதர் கோவில்களிலும் ஆடிபூர ம் பூஜைகள் நடந்தது.