நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாத்திட, புவனகிரி ஆதிவராகநல்லுாரில் வெள்ளாற்றின் குறுக்கேதடுப்பணைகட்டவேண்டும் என புவனகிரி பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.புவனகிரி, கீரப்பாளையம் சுற்று பகுதி கிராமங்களின் விவசாயம் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இதற்கான தண்ணீர் வெள்ளாற்றில் தேக்கி கிளை வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெற்றுவருகின்றனர். இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு முப்போக சாகுபடி செய்து செழிப்பாக இருந்தனர்.பின் காவிரி பிரச்னை காரணமாக இரண்டு போகமாக மாறி ,தற்போது ஒரு போக சாகுபடியும் கேள்விக்குறியாகும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.இதற்கு காரணமாக நெய்வேலி சுரங்கம் மற்றும் அதன் விரிவாக்கம் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டது.நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் பரங்கிப்பேட்டை கடற்கரையில் வெள்ளாறு கலக்கும் முகத்துவாரம் வழியாக கடல் நீர் உட்புகத்துவங்கியது. இது படிப்படியாக பு.முட்லுார், ஆதிவராகநல்லுார், புவனகிரி, கீரப்பாகளையம் என சேத்தியாதோப்பு வரை வெள்ளாற்று தண்ணீர் உப்பாக மாரியதால், விவசாயம் குடிநீர் ஆதாரமாக இருந்து தண்ணீர் உப்பாக மாறியது.இதனால் புவனகிரி,கீரப்பாளையம் ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 100க்கு மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.இந்த நிலையை போக்க வெள்ளாற்றின் குறுக்கே ஆதிவராகநல்லுாரில் தடுப்பணை கட்ட வேண்டும் என பொதுமக்கள் ,விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதற்காக விவசாய சங்கம், வர்த்தக சங்கம், ஊழல் எதிர்ப்பு இயக்கம்உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள், கடையடைப்பு நடத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.இது குறித்து அப்போதைய எம்.எல்.ஏ.,சரவணன் சட்டசபையில் கோரிக்கை வைத்தார். கடலுாரில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்ற அப்போதைய முதல்வர் பழனிச்சாமியும் தடுப்பணை கட்டப்படும் என அறிவித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்க வில்லை.தேர்தல் நேரத்தில் கட்சி தலைவர்கள் புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என வாக்குறுதி அளிப்பதோடு சரி,அதற்கு பிறகு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.இந்நிலையில் கடந்த 2019அக்டோபர் மாதம், கடலுார் மாவட்ட சிறப்பு அதிகாரியான வேளாண் துறை இயக்குனர் ககன்தீப் சிங் பேடி, ஆதிவராகநல்லுார் வெள்ளாற்றில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இருந்தும் நடவடிக்கை இல்லை. தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் பாண்டியன், அருண்மொழிதேவன் ஆகியோர் சட்டசபையில் கோரிக்கை வைத்தனர்.மேலும் முதல்வர் ஸ்டாலின், தொகுதியில் தீர்க்கப்படாமல் உள்ள முக்கியமான 10 கோரிக்கைகளுடன் எம்.எல்.ஏ.,க்கள் மனு அளிக்க வலியுறுத்தியிருந்த நிலையில் தடுப்பனை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன்:புவனகிரி ஆதிவராகநல்லுாரில் தடுப்பணை கட்ட பட்ஜெட்டின் போது நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தோம். கோரிக்கையின் பேரில், வேளண்துறை இயக்குனர் ககன்தீப்சிங்பேடி தடுப்பணை மாதரி வரைபடத்துடன்நேரில் ஆய்வு செய்து, ரூ.95 கோடி கதவணைக்கும், ரூ.33 கோடி நிலம் கையகப்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 2023--24 பட்ஜெட்டுக்கு முன்பாக தடுப்பணை கட்ட ரூ.112.30 கோடியும், நில ஆர்ஜிதம் செய்ய ரூ.44.18 கோடிதேவை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட நிலையில் திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக தான் உள்ளது என்றார்.வர்த்தக சங்க செயலாளர் ரத்தினசுப்ரமணியன்:வெள்ளாற்றில் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாத்திட, தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, புவனகிரி பகுதியில் உள்ள பல்வேறு பொது நல அமைப்புகளுடன், வர்த்தக சங்கம்இணைந்து கடையடைப்பு நடத்தி, உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இது வரை அரசு எந்த முயற்சியும் எடுக்க வில்லை.விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தடுப்பணை கட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் கூறினார்.ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதிநாகலிங்கம்:ஆதிவராகநல்லுார் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என கிராம சபைக்கூட்டத்தில் ஊராட்சி சார்பில் ஒன்றியபார்வையாளர் முன்னிலையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி,பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அப்போதைய கலெக்டருக்கு அனுப்பியுள்ளோம். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தடுப்பணை கட்ட அரசு முன் வரவேண்டும் என கூறினார்.